Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபாலியல் ரீதியாக துன்புறுத்தி 'ராகிங்' செய்த சீனியர்கள்; வேலூர் சி.எம்.சி விடுதியில் மாணவர்கள் அட்டகாசம்

    பாலியல் ரீதியாக துன்புறுத்தி ‘ராகிங்’ செய்த சீனியர்கள்; வேலூர் சி.எம்.சி விடுதியில் மாணவர்கள் அட்டகாசம்

    வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவர்களை அரைநிர்வாணப்படுத்தி அவர்களை ராகிங் செய்த 7 சீனியர் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. 

    வேலூர் மாவட்டம் பாயகத்தில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பல மாநில மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் பலர் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கியும் பயின்று வருகின்றனர். 

    இந்நிலையில் அங்குள்ள ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. 

    அந்தக் காணொளியில், மழை நேரத்தில் ஜூனியர் மாணவர்கள் மேல் சட்டை அணியாமல் அரைக்கால் ட்ரவுசருடன் விடுதியின் உள்வளாகத்தில் சுற்றி வருகின்றனர். அந்த சமயத்தில் சீனியர் மாணவர்கள் அவர்கள் மீது தண்ணீரை அடிக்கின்றனர். மேலும் சிலர் முட்டைகளையும் வீசுகின்றனர். மேலும் குட்டிக்கரணம் அடிக்கும்படியும் மிரட்டுகின்றனர். இதுமட்டுமின்றி, ஒரு சீனியர் மாணவர் நடந்து வரும் 2 மாணவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க சொல்கின்றனர். இது தொடர்பான காணொளியை பார்த்த ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கும், தில்லியில் உள்ள ராகிங் தடுப்பு பிரிவுக்கும் காணொளி பதிவுடன் புகார் அளித்துள்ளனர்.  இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவக்கல்லூரி சீனியர் மாணவர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

    மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த பேராசிரியர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விசாரணை அறிக்கை வந்தவுடன் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சி.எம்.சி மருத்துவமனை இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: சென்னையில் தொடரும் உயிர் பலி..! மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....