Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா என்ற விதி ரத்து- இபிஎஸ் அதிரடி

    நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா என்ற விதி ரத்து- இபிஎஸ் அதிரடி

    சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று காலை 9:15 முதல் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்று வருகிறது.

    இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் அதிமுக கட்சியின் சட்ட விதிகளில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு பொதுச்செயலாளர் தேர்தலுக்கான விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    நடைபெற்றுவரும் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களின் விபரம் பின்வருமாறு: 

    அதிமுக உறுப்பினர் பொன்னையன் வாசித்த 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    அதிமுக கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் பதவிக்கு 4 மாதத்தில் தேர்தல் நடத்தவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதிமுக பொதுச்செயலாளரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்கள் அனைத்தும் பொதுச்செயலாருக்கு வழங்க அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இரட்டைத் தலைமையால் நிர்வாக ரீதியாக, அரசியல் ரீதியாக முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதிமுக எழுச்சி பெற ஒற்றைத் தலைமை தேவை என முன்மொழியப்பட்டுள்ளது.

    அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பதவி, துணைப் பொதுச்செயலாளராக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதிமுகவில் புதிதாக துணைப் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....