Sunday, April 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்யின் 'லியோ' படக்காட்சிகள் இணையத்தில் கசிவு; அதிர்ச்சியில் படக்குழு!

    விஜய்யின் ‘லியோ’ படக்காட்சிகள் இணையத்தில் கசிவு; அதிர்ச்சியில் படக்குழு!

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் புரோமோ சமீபத்தில் வெளியாகி அதிகளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

    லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், த்ரிஷா, பிரயா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ் மற்றும் மன்சூர் அலிகான் போன்றோர் நடித்து வருகின்றர். லியோ படமானது தமிழ் சினமா ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்க்கும் படங்களின் பட்டியலில் முதன்மையாக உள்ளது. 

    இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் இணையத்தில் வைரலாகின. ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் காஷ்மீர் செல்லும் வீடியோ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவால் வெளியிடப்பட, அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. 

    இந்நிலையில், காஷ்மீரில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இது அதிகளவில் பகிரப்பட்டும் வந்தது. இதைத் தொடர்ந்து, படக்குழு தரப்பில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட விடியோவை பகிர்ந்தால் முன்னறிவிப்பின்றி நீக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ படத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எப்படி படத்தின் காட்சி வெளியானது என படக்குழு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    முத்தங்களும் முத்தங்களின் எண்ணிக்கையும் போட்டி போடட்டும் – கிஸ் டே ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....