Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதமிழக பாடபுத்தகத்திலும் 'சாவர்க்கர் ' - சர்ச்சையை கிளப்பும் பதிவு

    தமிழக பாடபுத்தகத்திலும் ‘சாவர்க்கர் ‘ – சர்ச்சையை கிளப்பும் பதிவு

    கர்நாடக பள்ளி பாடபுத்தகத்தில் . தலைவர் சாவர்க்கர் குறித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு சமர்ச்சீர் கல்வி பாடபுத்தகத்திலும் சாவர்க்கர் குறித்த தகவல் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் வரலாற்று ஆசிரியர் என இடம்பெற்றுள்ளது. ’1806ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் கலகத்தை 1857இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப்போரின் முன்னோடி என சவார்க்கர் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் எழுதப்பட்ட பாடப்புத்தகத்தில் வரலாற்று ஆசிரியர் சவார்க்கர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 2020ஆம் ஆண்டில் மறு பதிப்பு செய்தும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் பாடப்புத்தகத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்ட பொழுதும் அதே நிலை தொடர்ந்து உள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக மாநில பாடத்திட்டத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு கன்னட மொழி பாடப்புத்தகத்தில் ”அந்தமான் சிறைச்சாலையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டு இருந்த சிறிய அறையில் சிறிய துளை கூட கிடையாது. ஆனால், அவரது அறைக்கு எப்படியோ ஒரு ‘புல் புல்’ பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது ஏறி அமரும் சாவர்க்கர் தினமும் தாய் மண்ணிற்கு வந்து செல்வார்.” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த செய்திகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இதனை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், கர்நாடகாவில் 8ஆம் வகுப்பு கன்னடப்பாடப்புத்தகத்தில் சித்தாந்தவாதியான வி.டி.சாவர்க்கர் குறித்த பாடம் இடம் பெற்றிருந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்க்கரை வரலாற்று ஆசிரியர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சமூக அறிவியல் மற்றும் மொழி பாடபுத்தகங்களில் உள்ள பாடங்களை திருத்தம் செய்ய ரோகித் சக்ரதிர்தா என்பவர் தலைமையில் கர்நாடக அரசு குழு அமைத்தது. இந்த புதிய குழு, மொழி மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் மைசூர் மன்னர் திப்பு சுல்தான் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள், தந்தை பெரியார், நாராயண குரு உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள், முற்போக்கு கருத்து கொண்ட தலைவர்கள் குறித்த பாடங்கள் அகற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    அதற்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களையும், மதவெறியையும் போதிக்கூடிய பாடங்கள் புதிய புத்தகங்களில் சேர்க்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேஷவ் பலிராம் ஹேட்கேவர், சாவர்க்கர் குறித்த பாடங்கள் கர்நாடக அரசு வெளியிட்டு இருக்கும் பள்ளி பாட புத்தகங்களில் இடம் இருப்பதாக புகார்கள் குவிந்தன.

    மேலும் பள்ளிக்கல்வித்துறைக்குப் பாடப் புத்தகங்களை தயாரித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பாடநூல் பணிகள் மற்றும் சேவைக்கழகம் புத்தகங்களை அச்சிடும். அதற்கு முன்னர் தேவைப்படும் திருத்தங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சரிசெய்து புதிய புத்தகத்தை அச்சிட்டு வழங்குவது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....