Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் பட்டாகத்தியால் கேக் வெட்டும் கலாச்சாரம்! வைரல் ஆனதால் காவல்துறை அதிரடி நடவடிக்கை

    மீண்டும் பட்டாகத்தியால் கேக் வெட்டும் கலாச்சாரம்! வைரல் ஆனதால் காவல்துறை அதிரடி நடவடிக்கை

    சேலம் மாவட்டத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    சேலம் மாவட்டம் கொண்டாலப்பட்டி அடுத்துள்ள பகுதிதான், சித்தன்காட்டுவளவு. இங்கு வசிப்பவர்தான் 24 வயதான பிரபு. இவர் கடந்த நான்காம் தேதி அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 

    இவரது பிறந்தநாளை 4-ம் தேதி நள்ளிரவு அவரது நண்பர்களுடன் சித்தன்காட்டுவளவு காளியம்மன் கோயில் அருகில் பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியதாக தெரிகிறது. அதனை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். 

    இது கொண்டாலப்பட்டி காவல்துறையினருக்கு தெரியவரவே, பிரபு மற்றும் அவரது நண்பர்கள் சுந்தரமூர்த்தி, சூர்யா, பிரகாஷ், அசோக், மெய்யழகன், விஜயகுமார், முருகானந்தம் உள்ளிட்ட எட்டு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

    இந்நிலையில், அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருடுவதற்கு திட்டமிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதற்காக அவர்கள் வைத்திருந்த பட்டாகத்தி, மிளாகாய் தூள் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

    இதைத்தொடர்ந்து, அவர்கள் மீது கூட்டமாக ஒன்று கூடி பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் எட்டு இளைஞர்களையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் சேலம் மாவட்டம் கொண்டாலப்பட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அம்மா ஆனார் நயன்தாரா! விக்னேஷ் சிவனின் ‘ஹாப்பி’ ட்விட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....