Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்காலமானார், ஜூடோ கே.கே.ரத்னம் - நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

    காலமானார், ஜூடோ கே.கே.ரத்னம் – நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

    மறைந்த பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர் ஜூடோ கே.கே.ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

    ஜூடோ கே.கே.ரத்னம் தென்னிந்திய திரையுலகின் முக்கியமான சண்டைப் பயிற்சி இயக்குநராக திகழ்ந்தவர். 70 மற்றும் 80-களில் இவர் சண்டைப் பயிற்சி இயக்குநராக தனி முத்திரையே பதித்தார். 

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக ஜூடோ கே.கே.ரத்னம் பணியாற்றியுள்ளார். 

    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள ஜூடோ கே.கே.ரத்னம் பல இயக்குநர்களின் விருப்ப சண்டைப் பயிற்சியாளராக இருந்துள்ளார். குறிப்பாக, ரஜினிகாந்த் -ஜூடோ கே.கே.ரத்னம் கூட்டணி அதிகளவில் ரசிகர்களை கவர்ந்தது. மேலும், பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்தார். 

    இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று ஜூடோ கே.கே.ரத்னம் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசினார். அப்போது, ‘ஜூடோ ரத்னம் எனக்கு நீண்ட நாளாக பழக்கமுடையவர். அவர் பழகுவதற்கு மிகவும் மென்மையானவர். ஜூடோ ரத்னம் சண்டை பயிற்சியில் தனக்கென தனி பாணி உருவாக்கி சாதனை படைத்தவர். அவரது உதவியாளர்கள் நிறைய பேர் சண்டை பயிற்சியாளராக இருக்கிறார்கள். உதவியாளர்களின் பாதுகாப்பை எப்போதும் கவனத்தில் கொண்டு சண்டை பயிற்சி மேற்கொள்வார். 93 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்துள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்.’ என்று தெரிவித்தார்.

    மேலும், தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளரான திரு. ஜூடோ ரத்னம் அவர்கள் (92) வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன் என்று தெரிவித்துள்ளார். 

    அத்துடன், ‘கலையுலகிலும் அரசியல் உலகிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி மறைந்துள்ள திரு. ஜூடோ ரத்னம் அவர்களின் மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தார்க்கும் திரையுலக, அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    கட்டடத்தை இடிக்கும்போது நேர்ந்த விபத்து; பெண் பலி – சென்னையில் விபரீதம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....