Monday, May 13, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஓடிடியில் வெளியாகும் விடுதலை; 20 நிமிட காட்சிகள் இணைப்பா? - வெளிவந்த தகவல்..

    ஓடிடியில் வெளியாகும் விடுதலை; 20 நிமிட காட்சிகள் இணைப்பா? – வெளிவந்த தகவல்..

    வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடசென்னை, அசுரன் திரைப்படத்தின் வெற்றிகளைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம், விடுதலை. இத்திரைப்படத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய்சேதுபதி மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க, சூரிக்கு நாயகியாக பவானி ஶ்ரீ நடித்துள்ளார். 

    இளையராஜா இசையமைத்துள்ள இத்திரைப்பட்ம  இரு பாகங்களாக உருவாகியுள்ளது. தற்போது முதல் பாகம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இந்நிலையில், விடுதலை படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டில் மேலும் 20 நிமிடக் காட்சிகளை இணைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வெளியானது, அசோக் செல்வனின் சபாநாயகன் படத்தின் டீசர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....