Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை! காரணம் தெரியுமா?

    இனி கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை! காரணம் தெரியுமா?

    கர்ப்பிணிப் பெண்களுக்கு இனி கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. 

    இதுகுறித்து, மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநருக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில், 

    மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கொரோனா பரிசோதனைகள் குறித்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், சுவாசக் கோளாறுகள், வாசனை, சுவை இழப்பு உள்ளவர்களுக்கு மட்டும் இனி கரோனா பரிசோதனை செய்தால் போதும்.

    மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை (ஆர்டி-பிசிஆர்) தேவை இல்லை. குறிப்பாக, அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு கூட அறிகுறிகள் இருந்தால் மட்டும் கொரோனா பரிசோதனை செய்தால் போதும். அறிகுறிகள் இல்லாவிட்டால் கொரோனா பரிசோதனை அவசியம் இல்லை.

    அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். வெளிநாட்டு விமானங்களில் வருபவர்களில் தோராயமாக 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யும் நடைமுறையும் தற்போது கைவிடப்படுகிறது.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    ‘இனி அனைவரும் கடல் பார்க்கலாம்’; சம வாய்ப்பை வழங்கும் மெரினா – ஒரு பார்வை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....