Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசுதந்திர தின கொண்டாட்டம்; பொதுமக்களுக்கு நற்செய்தி சொன்ன தமிழக அரசு

    சுதந்திர தின கொண்டாட்டம்; பொதுமக்களுக்கு நற்செய்தி சொன்ன தமிழக அரசு

    சுதந்திர தின நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, இந்தியா முழுவதும் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தீவிரமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும், சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரத்தை ட்டியுள்ளது. 

    தமிழகத்தை பொறுத்தவரையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் போதும் சென்னை ராஜாஜி சாலையில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும். அந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளிப்பர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    தற்போது, இந்த தடையானது முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், இதன்மூலம், சென்னை மெரினாவில் நடைபெற உள்ள சுதந்திர தின அரசு நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும், சுதந்திர தின விழாவிற்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், வயதானவர்கள் மற்றும் சிறுவர்களை அழைத்து வர வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில், அனைத்து கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னதாக, சுதந்திர தின விழாவையொட்டி, குடிமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி- மத்திய அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....