நடிகர்கள் ஆர்யா மற்றும் கவுதம் காரத்திக் இணைந்து நடிக்க உள்ள புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்யா- கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ள மிஸ்டர் எக்ஸ் (Mr.X) என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கின்றனர்.
இப்படத்தை விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்க உள்ளார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் நடைபெற உள்ளது.
மேலும், இப்படத்திற்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார். தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விபரம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று செயல்படும்