Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகருவுற்றிருப்பதாக கூறி நாடகமாடிய பெண்; போராடிய கணவன்!

    கருவுற்றிருப்பதாக கூறி நாடகமாடிய பெண்; போராடிய கணவன்!

    திருமணமானது முதல் குழந்தை வேண்டும் என கூறிய கணவரையும் அவரது வீட்டாரையும் ஏமாற்ற கருவுற்றிப்பதாக பெண் நாடகமாடி ஏமாற்றிய சம்பவம் கணவரின் போராட்டத்தினால் அம்பலமானது. 

    திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர், கருவுற்றிப்பதாக தனது கணவரையும், அவரது வீட்டாரையும் நம்ப வைத்தார். இதையடுத்து முறையாக சீமந்தம் நடத்தப்பட்டு அவர் தாய் வீட்டுக்கும் சென்றார். இருப்பினும் ஒருவரும் சந்தேகம் கொள்ளவில்லை. 

    பிறகு ஒருநாள், பிரசவ வலி வந்ததாகவும் தனக்கு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாகவும் கணவரிடம் அப்பெண் தெரிவித்தார். மேலும், இணையத்தில் இருந்து ஒரு பெண் குழந்தை புகைப்படத்தை எடுத்து அனுப்பி, இது தான் நமது குழந்தை எனவும் அனுப்பினார். 

    இதையடுத்து புகைப்படத்தை பார்த்த ஆர்வத்தில், குழந்தையைக் காண கணவர் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது குழந்தை இல்லாமல் மனைவி மட்டும் இருப்பதை பார்த்த கணவர், குழந்தை எங்கே என கேட்டதற்கு, இன்குபேட்டரில் வைத்திருப்பதாக மனைவி தெரிவித்தார். 

    இதையும் நம்பிய கணவர், மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது குழந்தை குறித்த தகவல்களை கேட்க மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினார். மருத்துவமனை நிர்வாகம் அப்படி ஒரு குழந்தை பிறக்கவே இல்லை என தெரிவித்தது. 

    இதைத்தொடர்ந்து, உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தது. இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சென்று அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் கருவுறவே இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு காவல்துறையினர் அப்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

    ‘ரப்பர் மேன் உடன் ராப் ஸ்டைல் உடற்பயிற்சி’ – ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பதிவு வைரல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....