Saturday, April 27, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்யின் வாரிசு படத்தில் இணையும் பிரபல பிக்பாஸ் நட்சத்திரம்!

    விஜய்யின் வாரிசு படத்தில் இணையும் பிரபல பிக்பாஸ் நட்சத்திரம்!

    பிக்பாஸ் முதல் சீசனில் கலக்கிய பிரபல நட்சத்திரம், தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    நடிகர் விஜய்யின் நடிப்பில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகிய திரைப்படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

    இருப்பினும், இத்திரைப்படம் பெரிதான நல்ல விமர்சன வரவேற்புகளை பெறவில்லை.
    விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வசூலும் ஓரளவு தான் செய்தது.

    இதைத்தொடர்ந்து தற்போது, நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா, முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிக் பாஸ் முதல் சீசனில் கலக்கிய கணேஷ் வெங்கட்ராமன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே பல துறை பிரபலங்கள் வாரிசு திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்ற நிலையில், தற்போது கணேஷ் வெங்கட்ராமன் இணைந்துள்ளதால், இத்திரைப்படத்தின் மீதான மேலும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....