Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு டெண்டர் அறிவிப்பு!

    பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு டெண்டர் அறிவிப்பு!

    பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு பருத்தி நூல் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவித்துள்ளது. 

    பொங்கல் பண்டிகையையொட்டி, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டமானது தமிழக அரசினால், 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு இத்திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தி வருகிறது.  

    இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்துக்கு 1,683 மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்க, தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது. 

    மேலும் 1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதற்கான டெண்டருக்கு வருகிற செப்டம்பர் மாதம் 9-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த டெண்டர் அறிவிப்பால், 15 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களும், 54 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்களும் பயன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலவசங்கள் மிக முக்கியமான பிரச்சனை- உச்சநீதிமன்றம் கருத்து

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....