Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிகாரம் இன்று என்னிடம் இருந்திருந்தால் ! 'பாட்டாளி மாடல்' ஆட்சி எப்படி இருக்கும் என விவரித்த...

    அதிகாரம் இன்று என்னிடம் இருந்திருந்தால் ! ‘பாட்டாளி மாடல்’ ஆட்சி எப்படி இருக்கும் என விவரித்த அன்புமணி

    மக்களாகிய நீங்கள்தான் நல்லது செய்பவர்களை தேர்வு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

    பாமக சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார். 

    அந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது :

    உங்களுக்கு என்ன தேவை என்பது உங்களுக்கே தெரியவில்லை. ஆதலால், தமிழ்நாடு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது கடமை. மக்களாகிய நீங்கள்தான் நல்லது செய்பவர்களை தேர்வு செய்ய வேண்டும். நாம் வெறுமனே சின்னத்தை பார்த்து வாக்களிக்கிறோம்.

    நல்ல தலைவர்களை, திட்டங்களை பார்த்து நாம் வாக்களிப்பது இல்லை. மாறாக பணத்தை பார்த்து வாக்களிக்கிறோம். நான் 2019-ல் பாரளுமன்ற தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்டேன். அதிமுக, திமுக ஆட்சி அதிகாரம் பணபலத்தை மீறி எனக்கு வாக்களித்தார்கள். 

    மேலும், போனில் நீங்கள் எதனை பார்க்கிறீர்கள்? அதில் எந்த தலைவர் நல்ல தலைவர்? யார் திட்டங்களை சொல்கிறார்? யார் நேர்மையானவர்? போன்றவற்றை மக்கள் பார்க்க வேண்டும். இந்த விழிப்புணர்வு வந்துவிட்டால் நீங்களே அனைத்தையும் தேர்வு செய்து கொள்வீர்கள். 

    இவ்வாறு பேசினார்.

    மேலும், உலகிலேயே மிகப்பெரிய பிரச்சனையான காலநிலை மாற்றத்தை அதிகம் பேசுவது பாமகதான் என்றும், என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்திருந்தால், காலநிலை மாற்றம் அவசரநிலையை பிரகடனம் செய்திருப்பேன் என்றும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: அலுப்பு தட்டாத நம்ம ஊர் சூப்பர் ஹிரோ படம்….மின்னல் முரளி மின்னியதா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....