Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇன்று நடைபெறவிருக்கும் ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம்

    இன்று நடைபெறவிருக்கும் ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜி 20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. 

    ஜி 20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்றது. இதையடுத்து நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தாயார் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஜி 20 உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஜி 20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள்.  

    ஜி 20 உச்சி மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் மாலை 5 மணி அளவில் நடைபெற இருக்கிறது. 

    ஜி 20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். 

    அதே சமயம் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கும் மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    “நான் உடற்தகுதியுடன்தான் இருக்கிறேன்” – கேலிகளுக்கு பதிலளித்த மஞ்சிமா மோகன்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....