Friday, March 31, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் விஜய் எடுத்த புகைப்படம் வைரல்; காரணம் இதுதான்!

    நடிகர் விஜய் எடுத்த புகைப்படம் வைரல்; காரணம் இதுதான்!

    தளபதி விஜய் அவர்களின் பீஸ்ட் திரைப்பட சார்ந்த அப்டேட்டுகளுக்காக இந்திய அளவில் ரசிகர்கள், சினிமா பிரியர்கள் காத்திருக்க பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் வெளியிடு என்று மட்டுமே தகவல் வந்திருக்கிறது. 

    இத்தகவலுக்கு அடுத்த படியாக வேறு ஏதும் அப்டேட்டுகள் வருமா என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் எதிர்பார்ப்பில் காத்திருக்க, பீஸ்ட் திரைப்படக்குழு எந்த புதிய அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகிறது.

    beast

    விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் விஜய் அவர்களின் தளபதி 66 திரைப்படம் குறித்தும் பெரிய அப்டேட்டுகள் எவையும் தெரியவில்லை. தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் ஆரம்பிக்காத நிலையில், தளபதி 67 திரைப்படம் குறித்து பேச்சுகள் ஆரம்பித்துவிட்டது. 

    பெரும்பாலோனோர் தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள்தான் இயக்கப்போகிறார் என்று கூறிவந்த நிலையில், விஜய் அவர்கள் எடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று, பலரின் கூறலையும் உறுதிப்படுத்துவதாய் இருக்கிறது. அப்புகைப்படம் மேலும் விஜய் அவர்களின் 68 வது திரைப்படத்தின் இயக்குனர் இவர்தானோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

    நடிகர் விஜய், இயக்குனர்கள் அட்லீ, நெல்சன் திலீப்குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் ஒன்றாக சந்தித்துள்ளனர். இச்சந்திப்பின் பொது விஜய் அவர்கள், அட்லீ, நெல்சன் திலீப்குமார் மற்றும் லோகேஷ் கனகராஜை புகைப்படம் எடுத்துள்ளார்.

    atlee loki nelson

    இப்புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய் அவர்கள் இப்புகைப்படத்தை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்புகைப்படம் thalapathy67 என்ற ஹேஷ்டெக் உடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    திடீர் சந்திப்பு ஏன்? இதற்கு பின் என்ன காரணம் என்று பலரும் யோசித்து வருகின்றனர். அதே சமயம், விஜய் அவர்கள் தனது அடுத்தடுத்த படங்களின் இயக்குனர்களை ஒன்றாக சந்திக்க வைத்து கதை சார்ந்த கருத்துகளை பகிரச்செய்யவே இச்சந்திப்பு என்று பலர் கூறி வருகின்றனர்.

    தளபதி 66

    மேலும், பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி முடித்துள்ள நிலையில், தளபதி 66 திரைப்படத்தை வம்சி அவர்கள் இயக்குகிறார். இதன் பின்பு விஜய் அவர்களின் 67 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும், 68 வது திரைப்படத்தை அட்லீ இயக்குவார் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இத்தகவல்ககள் உறுதிப்படுத்தாத ஒன்றாகவே இருக்கிறது.

    தளபதி விஜய் அவர்கள் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்களிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    news

    60 சவரனா? 200 சவரனா? – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் புதிய...

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 200 சவரன் வரை நகைகள் திருடு போனதாக புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் 60 சவரன் தங்க நகைகள்...