Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமழைக்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    மழைக்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்றும் இரு அவைகளும்  (ஜூலை 19) ஒத்திவைக்கப்பட்டது.

    நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 18) தொடங்கி வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளான நேற்று இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    இரண்டாவது நாளான இன்று காலை கூட்டத்தொடர் தொடங்கியதும், விலை உயர்வு, பணவீக்கம், அத்தியாவசிய பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க இரு அவைகளிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை இரண்டு அவைத்தலைவர்களும் நிராகரித்ததால், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடத்துவங்கினர். மேலும், பதாகைகளை ஏந்தி அவைத்தலைவர்களின் இருக்கைக்கு அருகே வந்து அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

    எதிர் கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியைத் தொடர்ந்து, இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர்கள் அறிவித்தனர்.

    இதையடுத்து இன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் அவை தொடங்கியது. இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பெரிய அளவில் சேதங்கள் ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் தொடர்பான மசோதாவை மாநிலங்களவையில் கடும் அமளிகளுக்கு இடையே தாக்கல் செய்தார்.

    பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் மற்றும் அவற்றை விநியோகம் செய்யும் அமைப்புகள் (சட்ட விரோத நடவடிக்கைகள் தடை) தொடர்பான திருத்த மசோதா, கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் மற்றும் அவற்றை விநியோகம் செய்யும் அமைப்புகளுக்கான  (சட்ட விரோத நடவடிக்கைகள் தடை)  சட்டம் 2005ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

    சட்டத்துக்கு விரோதமான வகையில், பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தும் ஆயுதங்களை உருவாக்குதல், கடத்துதல் போன்ற செயலுக்கு 2005ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் தடை விதிக்கிறது. 

    எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடர்ந்ததால், இரண்டு அவைகளும் நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், 18 அமர்வுகளில் மொத்தமாக 32 மசோதாக்கள் பற்றி விவாதிக்க உள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் இரண்டு நாள்களும் கடும் அமளி காரணமாக நாள் முழுவதும் ஒத்திவைக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....