Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்விடாது துரத்தும் துரதிர்ஷ்டம்; அதிர்ஷ்டம் நோக்கி நெருங்கும் ஓபிஎஸ்? - அதிமுகவின் செண்டிமென்ட்!

    விடாது துரத்தும் துரதிர்ஷ்டம்; அதிர்ஷ்டம் நோக்கி நெருங்கும் ஓபிஎஸ்? – அதிமுகவின் செண்டிமென்ட்!

    அரசியல்வாதிகளுக்கும் கோவில்களுக்கும் ஒரு சென்டிமெண்ட் உள்ளது. சில கோவில்களுக்கு செல்ல அரசியல்வாதிகள் அஞ்சுவார்கள். காரணம் பதவியோ, உயிரோ போய்விடுமோ என்ற அச்சம்தான்.

    இதற்கிடையில் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் ‘மதுரை சென்டிமெண்ட்’ பற்றி உங்களுக்கு தெரியுமா?

    அதென்ன மதுரை சென்டிமெண்ட் என்று பலருக்கும் கேள்வி எழலாம். அதாவது, ஓ.பன்னீர்செல்வம் எங்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினாலும் இறுதியில் மதுரையில் தான் பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று விரும்புவாராம். அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு தேனிக்கு புறப்பட்டு சென்றுவிடுவார் என்கின்றனர் ஓபிஎஸ்க்கு நெருங்கிய வட்டாரத்தினர்.

    இது அதிமுகவின் வெற்றிக்கு பெரிதும் உதவும் என்று ஒரு நம்பிக்கை கொண்டுள்ளாராம். அந்த வகையில் 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, காஞ்சிபுரத்தில் தான் தனது பிரச்சாரத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார். அதன்பிறகு பல்வேறு மாநகராட்சிகளில் தொடர் பிரச்சாரம் செய்து, இறுதியில் மதுரை மாநகராட்சியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். மதுரையில் உள்ள பழங்காநத்தம் ரவுண்டானாவில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    அதில் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் பன்னீர்செல்வம். பின்னர், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    இதிலிருந்து மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்வதும், மீனாட்சி அம்மனின் அருளை பெறுவதும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பிற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

    இதனை தொடர்ந்து பல்வேறு சிறப்புகளைப் பெற்ற திருவண்ணாமலை ஆலயம் அரசியல்வாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஆலயமாக மாறியுள்ளது. இதற்கு காரணம் சென்டிமெண்ட். 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி தற்போது பதவியிழந்த ஓ.பன்னீர் செல்வம் வரை இந்த சென்டிமெண்ட் போட்டு தாக்குகிறது என்றே கூறலாம்.

    தீப திருவிழாவிற்கு வந்து சென்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதவியை பறிகொடுத்து இப்போது அரசியலில் இருந்தே காணாமல் போய்விட்டார். முன்னாள் அமைச்சர்கள் ஆனந்தன், கோகுல இந்திரா ஆகியோரும் கட்சிப்பதவி, அமைச்சர் பதவிகளையும் இழந்தனர்.

    திருவண்ணாமலை ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்திற்கு புனித நீர் எடுத்துச்செல்ல வெள்ளிக்குடங்கள் எடுத்துக் கொடுத்தாராம் ஓ.பன்னீர் செல்வம். இதுவே அவரது பதவி பறிபோக காரணமாகிவிட்டதாக கூறுகின்றனர்.

    விக்ரம் திரைப்படம் விடிவெள்ளியா? விழுந்த இடியா? – எதிர்ப்பார்ப்பில் திரையுலகம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....