Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்''திமுகவின் பினாமி'' மன்னிப்பு கேட்டாலும் ஓபிஎஸ்-ஐ ஏற்க முடியாது - எடப்பாடி பளீர் பதில்

    ”திமுகவின் பினாமி” மன்னிப்பு கேட்டாலும் ஓபிஎஸ்-ஐ ஏற்க முடியாது – எடப்பாடி பளீர் பதில்

    தி.மு.க பினாமிபோல் கட்சிக்கு எதிராக செயல்படும் ஓ.பன்னீர்செல்வத்தை தொண்டர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அவரே வழிய வந்து மன்னிப்பு கேட்டாலும் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து , ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆதரவாளர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டு, அங்கிருந்த ஆவணங்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயின. பின்னர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஈ.பி.எஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு, அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அலுவலக ‘சீல்’ அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிகழ்வை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்திற்கு வருவதாக அறிவிப்புகள் வெளியானது. இந்த அறிவிப்பிற்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் புகழேந்தி என்பவர் டிஜிபி அவர்களிடம் நேற்று புகார் மனு ஒன்றையும் கொடுத்திருந்தார் .

    ஆனால் இவற்றையெல்லாம் மீறி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவதற்கான, அவரை வரவேற்பதற்கான அனைத்து வேலைகளும் மும்மரமாக நடைபெற்றது. எங்கள் சாமி எடப்பாடி பழனிச்சாமி என முகப்பு பேனர் வைத்து, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கட்சி தொண்டர்கள் திரளாக கூடினர். அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஈ.பி.எஸ் அவர்களுக்கு அவரது இல்லத்திலிருந்தே வரவேற்பு அளிக்கப்பட்டது. 72 நாட்களுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்த அவரை, அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, டி ஜெயக்குமார் ஆகியோர் முதலில் வரவேற்றனர். இதனையடுத்து தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்பு அலுவலகத்திற்குள் நுழையும் முன்பு மூன்று முறை தரையை தொட்டு வணங்கிவிட்டு சென்ற பழனிச்சாமி அவர்கள் அங்கு அலுவலக அறையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோரது உருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதையை செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அறைகளையும் பார்வையிட்ட பழனிச்சாமி, புதிதாக நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

    இதன் பின்பு அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பேசிய போது அ.தி.மு.க.வை சிதைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நமது வெற்றி ஒரு பாடமாக இருக்கும். பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறோம் என கூறினார்.

    அதுமட்டுமின்றி நீதிமன்ற உத்தரவுபடி அதிமுக தலைமை அலுவலகம் நமது தரப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் கட்சியின் நலன் கருதி என்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி என்று அப்போது பேசினார்.

    தொண்டர்களுடன் நடந்த இந்த உரையாடலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை மற்றும் சூறையாடல் ஆகியவை தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கதவுகளை நாடிய பிறகே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவின் அலுவலகத்திற்கே இப்படியொரு நிலை என்றால் திமுக அரசின் செயல்பாடுகளை நினைத்து பாருங்கள் என்று தெரிவித்தார். அதிமுக பல்வேறு காலகட்டங்களில் இதுமாதிரியான சோதனைகளை சந்தித்து மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்து வந்துள்ளது.

    எனவே கழக ஆட்சியை மீண்டும் நிறுவ தொண்டர்கள் அனைவரும் தீவிரமாக வேலை செய்ய வேண்டும் என்று அப்போது கேட்டுக் கொண்டார். அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கான வேலைகள் தொடங்கின. ஆனால் சிலர் நீதிமன்றம் சென்றுவிட்டதால் அந்த பணிகள் அனைத்தும் தற்போது முடங்கியுள்ளன. மீண்டும் விரைவில் பொதுச் செயலாளர் பதவிக்கான வேலைகள் தொடங்கும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. 96 சதவிகித பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர் என்று கூறினார்.

    இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ் மன்னிப்பு கேட்டால் ஒத்துக்கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஈ.பி.எஸ் ,ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? கட்சியின் உயர்ந்த பொறுப்பில் இருந்த ஒருவர், கொள்ளைக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதுபோல், ரவுடிகளோடு வந்து அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை காலால் எட்டி உதைத்தார். அதனால் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டிருக்கும் போது, திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கும் போது, அவரை மன்னிக்க முடியாது.

    ஓபிஎஸ் பச்சோந்தியை விட ஆபத்தானவர். சந்தர்ப்பத்திற்கு ஏற்றார் போல் மாறுவார். ஒரு அதிமுக எம்எல்ஏவை கூட தி.மு.க.வால் அசைக்க முடியவில்லை. அதிமுகவை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆர்.எஸ்.பாரதியை தேர்தலில் போட்டியிடச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று காட்டமாக பதிலளித்தவர், இறுதியாக தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மீண்டும் அதிமுக ஆட்சி மலர பாடுபடுவோம். அதற்காக தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு தான் வருகிறேன். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று கூறி முடித்தார்.

    இதையும் படிங்க: அமித் ஷா உயிருக்கு அச்சுறுத்தல் ? மாறுவேடத்தில் ‘ஆபீஸர்’ போல் வந்த நபர் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....