Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கம்!

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கம்!

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்க சிறப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

    அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9 மணியளவில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கியது. இப்பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஓ.பன்னீர்செல்வம், ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் கட்சி தலைமை அலுவலகத்துக்குச் சென்றார். 

    இந்நிலையில், சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன், கட்சியின் பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் வழக்குத் தொடர்ந்ததற்கு கண்டனம் தெரிவித்தார். 

    இதனை தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது அனைத்து ஆதரவாளர்களையும் அதிமுகவிலிருந்து நீக்க சிறப்பத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாகவும் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார். 

    இந்தச் சிறப்புத் தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து வித பொறுப்புகளிலிருந்தும் ஓ. பன்னீர் செல்வம் நீக்கப்டுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

    ஓ. பன்னீர்செல்வம் திமுக ஆட்சியுடன் நட்பு பாராட்டியது மற்றும் ஆட்சியைப் பாராட்டியது அனைத்தும் கட்சியின் விதிகளுக்கு முரணானது. கட்சி விதிகள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தச் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

    நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா என்ற விதி ரத்து- இபிஎஸ் அதிரடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....