Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இந்திரா காந்தியின் பிறந்தநாள்: ராகுல் காந்தியின் மராட்டிய மாநில நடைபயணத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்பு

    இந்திரா காந்தியின் பிறந்தநாள்: ராகுல் காந்தியின் மராட்டிய மாநில நடைபயணத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்பு

    இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். 

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், இந்த மாதம் 7 ஆம் தேதி மராட்டிய மாநிலத்தில் நடைபயணத்தை தொடங்கினார். பல தரப்பு மக்களும் இவருக்கு ஆதரவு தருவதுடன், மாநில முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு வருகின்றனர். 

    ராகுல் காந்தி தற்போது அகோலாவில் உள்ள புல்தானா மாவட்டத்துக்கு செல்ல உள்ளார். இந்நிலையில், இன்று நவம்பர் 19 ஆம் தேதி ராகுல் காந்தியின் மராட்டிய மாநில நடைபயணத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். 

    முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, ராகுல் காந்தியின் நடைபயணத்தில் மகளிர் மட்டுமே பங்கேற்பார்கள். காங்கிரஸ் மகளிர் தொண்டர்கள், மகளிர் அணிகளை சேர்ந்தவர்கள் காலை, மதியம் நடைபயணத்தில் கலந்து கொள்வர். மேலும் மராட்டிய மாநில மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் மகளிர் மக்கள் பிரதிநிகளும் இந்த நடைபயணத்தில் பங்கேற்பர் என தெரிவித்தார்.

    ராகுல் காந்தியுடன் ஒற்றுமை பயணத்தில் இணைந்த காந்தியின் கொள்ளுப்பேரன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....