Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டம் காலாவதியானது! ஆளுநர் ஒப்புதல் இல்லாததுதான் காரணமா?

    ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டம் காலாவதியானது! ஆளுநர் ஒப்புதல் இல்லாததுதான் காரணமா?

    ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் நேற்றுடன் 6 வாரங்கள் நிறைவடைந்ததை அடுத்து சட்ட மசோதா காலாவதியானது. 

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு பலரும் அடிமையாகி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் சிலர் தங்களது உயிரையும் இழந்தனர். 

    இதன் காரணமாக தமிழக அரசு கடந்த மாதம் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை சட்டமன்றத்தில் மசோதாவாக நிறையவேற்றியது. மேலும் அதனை கடந்த மாதம் 28 ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. 

    இதனிடையே கடந்த நவம்பர் 24 ஆம் தேதி, இந்த அவசர சட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பி, தமிழக அரசுக்கு பதில் கடிதம் ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்டது. அதுமட்டும் இன்றி, 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்து. இதைத்தொடர்ந்து தமிழக அரசு அடுத்த நாள் காலை 11 மணிக்கே பதிலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தது. 

    தமிழக இந்தச் சட்டத்தை கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி கொண்டு வந்த நிலையில், நேற்றுடன் 6 வாரங்கள் நிறைவடைந்ததால், சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் நேற்றுடன் காலாவதியானது. 

    ஆளுநர் கேட்ட விளக்கத்தை தமிழக அரசு அளித்தும், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ‘இனி அனைவரும் கடல் பார்க்கலாம்’; சம வாய்ப்பை வழங்கும் மெரினா – ஒரு பார்வை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....