Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'இங்கெல்லாம் இறைச்சி வெட்டினால் அது குற்றம்' - உயர்நீதிமன்றம் அதிரடி!

    ‘இங்கெல்லாம் இறைச்சி வெட்டினால் அது குற்றம்’ – உயர்நீதிமன்றம் அதிரடி!

    கோயில் திருவிழாக்களை தவிர்த்து, கிராம பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக் கூடம் தவிர வேறு இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

    கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகே உள்ள மாதவலயம் பகுதியைச் சேர்ந்தவர் சையத் அலி பாத்திமா. இவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மடவாலயம் கிராமத்தில் தனது வீட்டின் அருகே அனுமதி இன்றி மாட்டிறைச்சி கடை நடத்தப்படுவதாகவும், அந்தக் கடையால் தனது குடியிருப்பு பகுதிக்கு மிகவும் சிரமமாக இருப்பதாகவும், தெரிவித்திருந்தார். மேலும் அந்த மாட்டிறைச்சி கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.

    இந்த மனுவானது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கிராம பஞ்சாயத்து தரப்பு வழக்கறிஞர், மாட்டிறைச்சி கடை வைத்திருப்பவர் ஒரு கோழி இறைச்சி கடை நடத்துவதற்கு மட்டுமே உரிமம் வைத்திருப்பதாகவும் ஆனால், மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடை நடத்துவதாகவும் வாதிட்டார். 

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல், எந்த ஒரு நபரும், எந்த இடத்திலும் கால்நடைகளை வெட்ட அனுமதிக்க கூடாது. கோயில் திருவிழாக்களைத் தவிர்த்து, கிராமப் பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக் கூடம் தவிர வேறு இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம் என்று இதற்கான சட்ட விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

    மேலும் நீதிபதி, இந்த வழக்கில் உள்ளாட்சி அமைப்பின் உரிய உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்தி வருவதாக உள்ளாட்சி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். அதனால் உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்தினால், அதனை ஆய்வு செய்ய வேண்டியது அரசு அதிகாரிகளின் பொறுப்பு என கூறினார். 

    உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்துவது குறித்து, தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் 3 வாரங்களுக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

    துருக்கியில் நிலநடுக்கம்; 21,000-த்தை கடந்த பலி எண்ணிக்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....