Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை

    கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை

    கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் குரங்கம்மை நோய் பாதிப்பு 3 ஆக அதிகரித்துள்ளது. 

    குரங்கம்மை பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக கடந்த ஜூலை 14-ம் தேதி கேரளாவில் குரங்கம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதே மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு கடந்த ஜூலை 18-ம் தேதி குரங்கம்மை நோய் தொற்று உறுதியானது. 

    இந்நிலையில், கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 3 ஆக அதிகரித்துள்ளது. 

    குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட மல்லபுரத்தைச் சேர்ந்த அந்த நபர், கடந்த ஜூலை 6-ம் தேதி கேரளாவுக்கு வந்ததாகவும், அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.    

    மேலும் அவர், குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

    இந்தியாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட 3 பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

    குரங்கம்மை: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....