Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஓஎன்ஜிசியுடன் கைகோர்த்த முன்னணி சர்வதேச எண்ணெய் நிறுவனம்

    ஓஎன்ஜிசியுடன் கைகோர்த்த முன்னணி சர்வதேச எண்ணெய் நிறுவனம்

    இந்திய நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணிகளை மேற்கொள்வதற்காக, முன்னணி சர்வதேச எண்ணெய் நிறுவனமான எக்ஸான்மொபிலுடன், இந்தியப் பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

    இந்த ஓப்பந்தம் குறித்து ஓஎன்ஜிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணிகளை (drill works) ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் ஓஎன்ஜிசி-க்கும், எக்ஸான்மொபிலுக்கும் இடையே கையொப்பமாகியுள்ளது.

    கிழக்குக் கடலோரப் பகுதியிலுள்ள கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவிரிப் படுகையிலும் மேற்குக் கடலோரப் பகுதியில் உள்ள கட்ச்-மும்பை பிராந்தியத்திலும் இந்த துரப்பணப் பணிகளை இரு நிறுவனங்களும் மேற்கொள்ளும். 

    எக்ஸான்மொபிலுடனான கூட்டுறவு இரு தரப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவின் எண்ணெய்த் துரப்பணப் பணிகளில் ஓஎன்ஜிசி-க்கு இருக்கும் நீண்ட அனுபவமும் இந்தத் துறையில் எக்ஸான்மொபிலுக்கு இருக்கும் சர்வதேச தொழில்நுட்பத் திறனும் ஒருங்கிணைந்து, துரப்பணப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற உதவும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....