Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதடுப்பூசியால் வந்த சிக்கல்..? ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பங்கேற்க ஜோகோவிச்சுக்கு அனுமதி

    தடுப்பூசியால் வந்த சிக்கல்..? ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பங்கேற்க ஜோகோவிச்சுக்கு அனுமதி

    டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் விளையாடுவது குறித்து பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளன. 

    உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர்களுள் ஒருவர் நோவக் ஜோகோவிச். செர்பியா டென்னிஸ் வீரரான இவர் தற்போது ஏடிபி டூர் டென்னிஸ் போட்டியில் விளையாடி வருகிறார். 

    இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஒபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பெரும் சர்ச்சையே உருவாகியுள்ளது. 

    கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் விளையாட அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் விளையாட அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், தற்போது 2023-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அவர் பங்கேற்க விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது சர்ச்சையாகியுள்ளது. 

    ‘அப்போது அனுமதி வழங்கவில்லை இப்போது மட்டும் ஏன் அனுமதி?’ என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு தடுப்பூசி கட்டாயம் என்ற விதி அமலில் இருந்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம், ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற விதியை நீக்கியதாகவும், இதனாலேயே ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் பங்கேற்க விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இதையும் படிங்க: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய முதல்வர் ரூ.2.5 கோடி நிதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....