Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் - உலக சுகாதார மையம் தகவல்

    இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் – உலக சுகாதார மையம் தகவல்

    ஓமிக்ரானின் புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதர மையம் தெரிவித்துள்ளது. 

    இதுகுறித்து, உலக சுகாதார மையத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதாநோம் கூறுகையில், 

    “ கடந்த இரண்டு வாரங்களில் உலக அளவில் பதிவான கொரோனா தொற்று எண்ணிக்கை, சுமார் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பிஏ.4 மற்றும் பிஏ.5 கொரோனா வகை தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் ஏபி.2.75 என்ற புதிய துணை திரிபு வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 

    கொரோனா வைரஸ் அது முந்தைய வைரஸை விட வித்தியாசமாக இருந்தால், அது புதிய திரிபு வகை என்று அழைக்கப்படும். நாம் இன்றளவும் தொற்றுநோய்க்கு மத்தியில் இருக்கிறோம். வைரஸுக்கு நிறைய சக்திகள் உள்ளது.

    ஆகையால், மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டங்களை தவிர்க்க வேண்டும். மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.” 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    உதய்பூர் கொலை காணொளி திட்டமிட்டே பகிரப்பட்டது – என்ஐஏ தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....