Monday, May 6, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நாடோடி மன்னனாய் கலக்கும் தனுஷ் - வாத்தி அப்டேட்!

    நாடோடி மன்னனாய் கலக்கும் தனுஷ் – வாத்தி அப்டேட்!

    நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்திலிருந்து நாடோடி மன்னன் எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

    நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில்,  சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்திற்கு ஜி..வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில், சுவேதா மோகன் குரல் கொடுக்க, நடிகர் தனுஷ் பாடல் வரிகளை எழுத ‘வா வாத்தி’ எனும் பாடல் யூடியூப் தளத்தில் வெளிவந்து ரசிகர்களை கவரந்து வருகிறது. 

    இந்நிலையில், வாத்தி திரைப்படத்திலிருந்து நாடோடி மன்னன் எனும் மற்றொரு பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் யுகபாரதி வரியில், அந்தோனி தாசன் பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    விண்ணில் தெரியப் போகும் வால் நட்சத்திரம்; 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அற்புதம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....