Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி போக்குவரத்து சிக்னலின்போது உங்கள் காதுகளில் இசை பாயும்

    இனி போக்குவரத்து சிக்னலின்போது உங்கள் காதுகளில் இசை பாயும்

    சென்னையில் இனி போக்குவரத்து சிக்னலின்போது நீங்கள் ஒலிப்பான்களின் இரைச்சலை மட்டுமல்ல இசைக்கருவிகளின் இசையையும் கேட்பீர்கள்.

    சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்போதும், போக்குவரத்து சிக்னலின்போதும் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.  ஆனால், அந்த அவதியில் இருந்து சற்றே நிம்மதி பெற சென்னை போக்குவரத்து காவல்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    அதன்படி, சென்னையில் 105 போக்குவரத்து சிக்னல்களில் இசை ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து சிக்னலின்போது, வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதை குறைக்க சிக்னல்களில் காத்திருக்கும் நேரத்தில் இசையை ஒலிபரப்புகின்றனர். அதோடு இந்த இசைத் துணுக்குகள் வழியே போக்குவரத்து விதிமுறைகளும் ஒலிபரப்பப்படுகின்றன. 

    மேலும், இது குறித்து சென்னை காவல் ஆணையர் கபில் குமார் தெரிவித்துள்ளதாவது: 

    சென்னை மாநகரம் முழுவதும் 105 இடங்களில் இசையை ஒலிக்கவிட்டு வருகிறோம். இசையின் நடுவே போக்குவரத்து விதிமுறைகளும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

    மேலும், போக்குவரத்து காவலர்கள் தங்களிடத்தில் புது திரைப்பட இசைகளை வைத்திருப்பார்கள். அவர்கள், அவ்வபோது வெவ்வெறு இசைகளை, இசை ஒலிப்பான் மூலம் ஒலிக்கவிடுவார்கள். காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வு இரவு 9 மணி வரை நீடிக்கும்.

    இவ்வாறு சென்னை காவல் ஆணையர் கபில் குமார் தெரிவித்தார். 

    இதைத் தொடர்ந்து போக்குவரத்து காவலர் தெரிவித்துள்ளதாவது: 

    இந்த முயற்சி பெரும்பாலான வாகன ஓட்டிகளை கவர்ந்துள்ளது. சில வாகன ஓட்டிகள் தங்களின் விருப்ப பாடல்களை ஒலிபரப்ப சொல்லி கோரிக்கை வைக்கின்றனர். இன்னும் சிலர் இந்த முயற்சியை ஊக்குவிக்க வெவ்வேறு யோசனைகளை வழங்கி வருகின்றனர் . 

    குறிப்பாக, சிறுவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் இசையை கேட்கும்போது ஆனந்தமடைகின்றனர். 

    இவ்வாறாக, போக்குவரத்து காவலர் தெரிவித்தார். 

    நோயாளிகளின் தகவல்களை வெளியிட்டால் நடவடிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....