Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசபரிமலை கோயிலுக்கு 10 நாட்களில் 52 கோடி ரூபாய் வருவாய்

    சபரிமலை கோயிலுக்கு 10 நாட்களில் 52 கோடி ரூபாய் வருவாய்

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 11 நாட்களில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

    கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் தேதி பொதுமக்களுக்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் 27 ஆம் தேதி வரை 11 நாட்களில் 6 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் வருகிற 30 ஆம் தேதி வரை 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்துள்ளனர். 

    நேற்று ஒரு நாளில் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் இருந்ததால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  

    முதல் 10 நாட்களில் கோயிலுக்கு 52 கோடிக்கும் அதிகமாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் அப்பம்-அரவணை மூலம் மட்டும் 26 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

    கால்பந்து உலகக் கோப்பை: நாக் அவுட்டிற்கு முன்னேறிய பிரேசில்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....