Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மோகன்லால் நடிப்பது இப்படி ஒரு கதாப்பாத்திரத்திலா? - வியப்பில் திரையுலகம்!

    மோகன்லால் நடிப்பது இப்படி ஒரு கதாப்பாத்திரத்திலா? – வியப்பில் திரையுலகம்!

    நடிகர் மோகன்லால் பிரபல மல்யுத்த வீரர் தி கிரேட் காமாவாக நடிக்க
    உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய திரையுலகில் முக்கியமான நடிகர்களுள் ஒருவராக விளங்கி வருபவர், மோகன்லால். இவர் தற்போது ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஜல்லிக்கட்டு, அங்கமாலி டையரிஸ், சுருளி, நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்கள் மூலம் கவனம் பெற்ற லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி வருகிறார்.

    மிகவும் வித்தியாசமான கதை சொல்லல் முறையை கையாளும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மோகன்லாலை வைத்து எம்மாதிரியான படத்தை கொடுக்கப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    மேலும், ரசிகர்களின் ஆவலை அதிகரிக்கும் வகையிலேயே படம் குறித்த செய்திகளும் வெளிவருகின்றன. தற்போது கூட ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு துணைநடிகர்களுடன் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தில் மோகன்லால் மறைந்த பிரபல மல்யுத்த வீரரான ‘தி கிரேட் காமா’ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களையும், திரைத்துறையினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    தி கிரேட் காமா என அழைக்கப்படும் குலாம் முகமது பக்ச் பட்(1878 – 1960) பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் பிரபல மல்யுத்த வீரராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....