Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்துர்கா ஸ்டாலின் தலைமையில் கும்பாபிஷேகம்.. பகுத்தறிவுக்கு வந்த சோதனை - நெட்டிசன்கள் கிண்டல்

    துர்கா ஸ்டாலின் தலைமையில் கும்பாபிஷேகம்.. பகுத்தறிவுக்கு வந்த சோதனை – நெட்டிசன்கள் கிண்டல்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் தலைமையில் புதிதாக கோயில் கொடிமரம், விநாயகர், ராகு, கேது, பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நேற்று (செப் 5) நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். இந்த அம்மன் கோயில், அந்த மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. அந்த வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தந்தை ச.ஜெயராமனின் குலதெய்வ கோயிலாகவும் இக்கோயில் உள்ளது.

    இதனால் தனது தந்தை வழி குலதெய்வ கோயில் சிதிலமடைந்த நிலையில், அதன் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்து விட்டதால், இக்கோயிலை புணரமைக்க துர்கா ஸ்டாலின் அவர்களின் மேற்பார்வையில் 4 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது.

    கோயில் திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு 4 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. காலை யாகசாலை பூஜை நிறைவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள், மேள, தாளங்கள் முழங்க புறப்பட்டது.

    பிறகு கோவில் விமான கலசம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதி கலசங்களில் துர்கா ஸ்டாலின் பச்சைக் கொடியை அசைத்து காட்டிட, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் ஆகியோர் தலைமையில், பூஜிக்கப்பட்ட கடங்களில் இருந்த புனித நீரை விமான கலசங்களில் ஊற்றி, சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

    இதில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மட்டுமின்றி அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், ஸ்டாலின் மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டு புனித நீர் அடங்கிய கடங்கள் முன்பு கோவிலை வலம் வந்தனர்.

    மேலும், இந்த விழாவில் அமைச்சர் மெய்யநாதன், சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், கலெக்டர் லலிதா ஆகியோர் கலந்துகொண்டனர். நெட்டிசன்கள் பலரும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து பகுத்தறிவுக்கு வந்த சோதனை, இதுதான் சுயமரியாதை கற்றுக்கொடுத்த இயக்கமா? என்று பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .

    அதுமட்டுமின்றி இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த நான்கு நாட்களாக அங்கேயே தங்கி இருக்கிறாராம் துர்கா ஸ்டாலின். தங்கள் தலைவரின் மனைவி இங்கே இருக்கும்போது நாம் போகாமல் இருந்தால் சரியாக இருக்காது என நினைத்த திமுக விஐபி-க்கள் பலரும் கீழ்ப்பெரும்பள்ளத்துக்கு அழையா விருந்தாளியாக சென்று விசிட் அடித்து துர்கா முன்பு ஆஜர் கொடுத்துவிட்டு போகிறார்களாம்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....