Thursday, March 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்துணிவு திரைப்படத்தில் பாடிய மஞ்சு வாரியர்; டிரெண்டாகும் ஹேப்பி ட்விட்!

    துணிவு திரைப்படத்தில் பாடிய மஞ்சு வாரியர்; டிரெண்டாகும் ஹேப்பி ட்விட்!

    துணிவு திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் மூன்றாவது முறையாக நடிகர் அஜித்குமாரை இயக்கும் திரைப்படம்தான், துணிவு. இவர்களின் கூட்டணியில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் ‘துணிவு’ தரமான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

    துணிவு திரைப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொரு முறை வெளிவரும்போதும், ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் செல்கின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு அப்டேட் வந்துள்ளது. 

    அதன்படி, ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்தில், துணிவு திரைப்பட நடிகை மஞ்சுவாரியர் ஒரு ராப் பாடலை பாடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மஞ்சுவாரியர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    மேலும், அவர் தெரிவிக்கையில் ஜிப்ரான் இசையில் பாடியுள்ளது மிகவும் திரில்லிங்காக உள்ளது. துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சுவாரஸ்யமான பாடலில் ஒரு பகுதியாக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    துணிவு திரைப்படத்தை மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடவுள்ளது. மேலும், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் பொங்கலன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ‘இனி அனைவரும் கடல் பார்க்கலாம்’; சம வாய்ப்பை வழங்கும் மெரினா – ஒரு பார்வை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....