Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்"என்ன போய் ஏமாத்த நினைச்சிங்களே...." - பேரன்பின் நடிகன் மம்முட்டி பிறந்தநாள் ஸ்பெஷல்!

    “என்ன போய் ஏமாத்த நினைச்சிங்களே….” – பேரன்பின் நடிகன் மம்முட்டி பிறந்தநாள் ஸ்பெஷல்!

    மலையாளத் திரையுலகின் முக்கிய நடிகராக பார்க்கப்படுபவர்தான், மம்முட்டி. ஆக்‌ஷன் ஹிரோக்களாக, மாஸ் ஹிரோக்களாக தங்களை காட்சிப்படுத்தும் போது அவர்களுக்குள் இருக்கும் நடிப்புத் திறமைகளை நாம் மறந்துவிடுகிறோம். சமயங்களில் அவர்களே மறந்து விடுகின்றனர். 

    ஆனால், இந்த மறத்தலில் சிக்காத ஒருவர் மம்முட்டி என்றே சொல்லலாம். ஒரு முன்னணி நடிகர், மிகவும் மதிப்புமிக்க நடிகர் தான் வரும் எல்லா காட்சிகளிலும் தான்தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணாமல் நடிகர்களோடு நடிகர்களாக நடித்து, கதையோடு கதையாக பயணப்படுவது என்பது தற்போது அரிதாகிவிட்டது. இந்த அரிதில் ஒருவர்தான், மம்முட்டி. 

    இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்து கடந்த 2018-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்தான், பேரன்பு. இத்திரைப்படத்தில் உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் நடிக்க ஒப்புக்கொண்டதே வியப்புதான். இந்த பேரன்பில் நடித்ததற்கே மம்மூட்டியை பாராட்டலாம் என்று நினைத்தால், ‘இதற்கே…பாராட்டினால் எப்படி?’ என்ற தோரனையில்தான் திரைப்படம் முழுவதும் தன் கதாபாத்திரத்தோடு ஒன்றி பயணித்திருக்கிறார், மம்முட்டி. 

    திரைப்படத்தின் கதையின்படி, மனைவி பிரிந்து சென்றுவிட தனது மாற்றுதிறனாளி மகளை தனித்து வளர்க்கும் பொறுப்பை மம்முட்டி ஏற்க வேண்டிய சூழல் நேர்கிறது. இதன்பின்பு, இவர்கள் இருவர் வாழ்வில் இயற்கை எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதே திரைப்படம்.

    நீங்க எவ்வளவு நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கனு நீங்க புரிஞ்சுக்கறதுக்காக என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களத் தேர்ந்தெடுத்து இந்தக் கதைய நான் எழுதறேன்’  என்று மம்மூட்டியின் அமைதியான சலனமற்ற குரலில் ஆரம்பிக்கிறது திரைப்படம். எந்தவித படபடப்பும் இல்லாமல், பந்தாக்கள் இல்லாமல் தனது முதல் காட்சியில் தோன்றும் மம்மூட்டி திரைப்படம் முழுவதும் அவ்வாறேதான் இருக்கிறார். ‘க்ளோஸ் அப்’ காட்சிகளை முடிந்த வரை தவிர்த்தபடியே திரைப்படம் நகர அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியிருக்கிறார் மம்முட்டி. 

    வசனமில்லாமல் மெளனத்தின் வழியே திரைப்படத்தின் பல இடங்களில் நடித்தாலும், வசனத்துடன் மம்முட்டியின் நடிப்பு என்பது பேரன்பில் மெய்சிலிர்க்க வைத்தது என்றே கூற வேண்டும்.  

    திரைப்படத்தில் மம்முட்டி கதாப்பாத்திரத்தின் வாழ்க்கை நாள்பட நாள்பட கொடுரமாகிக் கொண்டிருக்க, அதை இலகுவாக்கும்படி அவரது வாழ்வில் ஒரு பெண் வருகிறாள். அப்போது, மம்முட்டி “தெய்வம் இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், தேவைப்படும் சமயத்தில் தேவதைகள் வருவார்களா என்றால் நிச்சயமாக வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். அப்படி வந்தது விஜி என்கிற இந்த விஜயலட்சுமி. ” என்று அனைத்து நம்பிக்கையையும் பாரத்தையும் இறக்கி வைக்கிறார், மம்முட்டி. 

    ஆனால், அந்த விஜயலட்சுமி கதாப்பாத்திரம் மிகப்பெரிய துரோகத்தை செய்ய அப்போது, முகத்தில் சிறுசிறு உணர்வுகளோடு மிகவும் சாந்தமாக “உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாத அழகான குழந்தை இருக்குறப்போ…என்ன போய் ஏமாத்த நினைச்சிங்களே…. அப்போ உங்களுக்கு எவ்ளோ பெரிய பிரச்சினை இருக்கும் விடுங்க’’ என்று மம்முட்டி சொல்லும் காட்சியில் அவர் எவ்வளவு தேர்ந்த நடிகர் என்பதை நம்மால் எளிதாக அறியமுடியும். நாலு நாளுக்குள்ள அப்பாவுக்கு நல்ல வேலை கிடைச்சிடும் அதுக்கப்புறம் நம்ம நல்ல வீட்டுக்கு போயிடலாம் என்று இயல்பாய் சொல்லிவிட்டு அடுத்தக் காட்சிக்கு நகர்வதிலும் மம்முட்டியின் ஆழமான ஆர்ப்பாட்டமற்ற நடிப்பை நம்மால் உணர முடியும். 

    இதுமட்டுமல்லாது, தன் மகளுக்காக அவளது காமம் சார்ந்த உணர்வுகளை போக்குவதற்காக அவளின் தந்தை மம்மூட்டியே பாலியல் தொழிலில் ஈடுபடும் ஆண்களை கேட்க முற்படும் இடமும், அப்போது மம்முட்டி நேரும் நிகழ்வுகளும் பார்க்கும் நம்மிடத்தில் மிகப்பெரிய சலனத்தை உண்டு செய்து விடுகிறது. 

    சிறிய சிறிய அசைவுகளில் ஆரம்பித்து திரைப்படம் முழுக்க அமுதவன் எனும் மம்முட்டி கதாப்பாத்திரம் கதையோடு ஒன்றியிடுவது வியப்புக்குரிய ஒன்றே. இந்தக் கட்டுரை முழுவதும் பேரன்பில் மம்முட்டியின் நடிப்பைப்பற்றி பேசினாலும், திரைப்படத்தைப் பார்க்கும்போது மம்முட்டி என்ற ஒரு நடிகர் சிறிய அளவிலும் நமக்கு தெரிய மாட்டார். நாம் காண்பதெல்லாம் அமுதவன் என்ற கதாப்பாத்திரத்தை மட்டுமே! கதையை விட்டு நகர்ந்நு வந்து யோசித்தால் மட்டுமே புரிகிறது மம்முட்டியின் அசாத்திய நடிப்பு. 

    ஒரு கதையில் கதை மாந்தர்கள் நடிக்கிறார்கள் என்பது தெரியாமல் இருப்பதுதான் கதைக்கான வெற்றியே. அதை திறம்பட செய்வது நடிகர்களின் கையில் இருக்கிறது. அதை திறம்பட மிக எளிமையாக ஆழமாக மம்முட்டி பேரன்பு திரைப்படத்தில் நிகழ்த்தியிருப்பார். 

    பேரன்பு திரைப்படம் மட்டுமல்ல, மம்முட்டி தான் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் ‘தான் ஒரு காதாப்பாத்திரம் மட்டுமே’ என்பதில் மிகவும் உறுதியாக இருந்துள்ளார், இருக்கிறார். இப்படியான கலைஞனுக்கு இன்று பிறந்தநாள்!

    தினவாசல் சார்பாக மம்முட்டி எனும் மெகா ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    “வாழ்க்கை பயணத்தை ஒன்றாக துவங்கலாமா? ” – அமீர் மீதான காதலை வெளிப்படுத்திய பாவ்னி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....