Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைவர்களுக்கு மம்தா அழைப்பு

    குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைவர்களுக்கு மம்தா அழைப்பு

    ஜுன் 15 ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களுக்கு மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.

    சமீபத்தில் நிகழ்ந்த ராஜ்யசபா தேர்தல்  எதிர்கட்சிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு மற்றும் ஒற்றுமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளம் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி ஜூலை 18 ஆம் தேதி நடைபெற திட்டமிட்டிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க ஜூன் 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தனது சகாக்கள் மற்றும் பிற தலைவர்களை சனிக்கிழமை அணுகினார். அனைத்து முற்போக்கு எதிர்க்கட்சிகளும் மீண்டும் கூடி, இந்திய அரசியலின் எதிர்காலப் போக்கைப் பற்றி ஆலோசிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் சரியான வாய்ப்பாகும்” என்று பானர்ஜி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    “நமது ஜனநாயகம் இக்கட்டான காலகட்டத்தில் இருக்கும் இவ்வேளையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களின் குரல் ஒலிக்க, எதிர்க்கட்சிகளின் கூட்டம் காலத்தின் தேவை என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட 22 தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, என்சிபி தலைவர் சரத்பவார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஜூன் 15-ம் தேதியை ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாக யெச்சூரி கூறினார்.

    பாஜக தலைவர் கூறுகையில் தனக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, எதிர்க்கட்சித் தலைவர்கள் பானர்ஜியின் இந்த நடவடிக்கையில் மகிழ்ச்சியடையவில்லை. மேலும் இது மற்ற மூத்த தலைவர்களை விட தன்னையே  பாஜக-விரோத முன்னணியின் தலைவராக காட்டிக்கொள்ளவும் டிஎம்சி தலைவரின் மற்றொரு முயற்சி என்று கருதுகின்றனர்.

    உக்ரைனில் பாஸ்போர்ட் வழங்கும் ரஷ்யா! கண்டனம் தெரிவிக்கும் உக்ரைன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....