Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகனமழை எதிரொலி; அசானா நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

    கனமழை எதிரொலி; அசானா நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

    மும்பை: மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அசானா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

    மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து இன்று, நந்தூர்பர், அகமத் நகர், ஒசமானாபாத், சங்கிலி ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும் துலே, ஜலகான், சோலாபூர், பந்தாரா, கொண்டியா ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் நிற எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

    இந்நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியிருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேபோல், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    மராட்டிய மாநிலத்தில் தொடர் கனமழையால், ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் தண்டவாளங்களில் அதிக மழை நீர் தேங்கி நிற்பதால் ரயில்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. 

    இதனிடையே, தானே மாவட்டம், மனிஷா மஹாதேவ் மந்திர் அருகே உள்ள அசானா நதி பாலத்தில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

     

    அமர்நாத்தில் மேக வெடிப்பு; 15 பேர் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....