Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாலாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பலி; பல பேர் படுகாயம்

    லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பலி; பல பேர் படுகாயம்

    மராட்டிய மாநிலத்தில் லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பலியாகினர். 

    மராட்டிய மாநிலம், தானே மாவட்டம் அம்பர்நாத்தில் இருந்து 50 பயணிகளுடன் சொகுசு பேருந்து ஒன்று ஷீரடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து நாசிக்கின் பத்தரே கிராமம் அருகே சென்று கொண்டிருக்கும்போது லாரி மீது மோதியது. சின்னார் ஷீரடி நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் 7 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பல பேர் படுகாயம் அடைந்தனர். 

    இதையடுத்து, இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சின்னார் ஷிரடியில் உள்ள கிராம மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மராட்டிய மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலா 5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

    ஆளுநருக்கு எதிராக ஏன் தீர்மானம்? – மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....