Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநர்மதை நதியில் பேருந்து கவிழ்ந்து 13 பேர் பலி

    நர்மதை நதியில் பேருந்து கவிழ்ந்து 13 பேர் பலி

    மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதை நதியில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மராட்டிய மாநிலத்தின் புனேவுக்கு இன்று காலை பேருந்து சென்றுள்ளது. அதில், 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. தார் மாவட்டம் கல்கோட்டில் உள்ள நர்மதை ஆற்று பாலத்தில் சென்ற பேருந்து எதிர்ப்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்தது,  நர்மதை ஆற்றில் விழுந்தது.

    இச்சம்பவத்தை அறிந்த அருகில் இருந்த மக்கள், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பொதுமக்களுடன் இணைந்து மீட்டு பணியை துரிதப்படுத்தினர். 

    இந்த விபத்தில், 13 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் 15 பேர் உடனடியாக மீட்கப்பட்டதாக மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

    இன்னும் முழுமையாக பேருந்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற முழு விவரமும், விபத்துக்கான காரணம் என்னவென்பதும் இதுவரை தெரியவில்லை. இந்த பேருந்தில் சென்ற பலரைக் காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு- 3 பேர் படுகொலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....