Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் மீண்டும் நடைபெறுமா?

    இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் மீண்டும் நடைபெறுமா?

    இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை நடத்த ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் விருப்பம் தெரிவித்துள்ளது. 

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டிகள் எப்போது நடந்தாலும், அது ரசிகர்களுக்கு திருவிழாக் கோலமாகத்தான் இருக்கும். அந்த வகையில், சமீபத்தில் ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் நடக்கையில் ரசிகர்களின் திருவிழாவை நாம் கண்டிருக்க கூடும். 

    ஆனால், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது 15 வருடங்களுக்கு மேலாக நடைபெறவில்லை. இறுதியாக, கடந்த 2007-ஆம் ஆண்டு இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது நடைபெற்றது. 

    இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை நடத்த ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் விருப்பம் தெரிவித்துள்ளது. 

    சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இருபது ஓவர் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டமானது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண மெல்போர்ன் மைதானத்தில் 90,293 பேர் குவிந்தனர். இப்போட்டியில், இந்திய அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

    இது குறித்து மெல்போர்ன் மைதானத்தின் முதன்மை இயக்குநர் ஃபாக்ஸ் ஸ்டூவர்ட் கூறியதாவது: 

    இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடரினை நடத்த நாங்கள் ஆவலாக உள்ளோம். டெஸ்ட் போட்டிகளை மெல்போர்னில் காண்பதற்கு பல ரசிகர்கள் உள்ளனர். ஆனால், இரு அணிகளையும் இணைத்து நடத்துவது சிறிது கடினமான காரியம். அதனால், அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது சவாலனதாகவே இருக்கும்.

    என்று கூறியுள்ளார். 

    உலகமே புத்தாண்டு கொண்டாட.. கொரியாவில் மட்டும் நிலைமையே வேறு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....