Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பு!

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பு!

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.  

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

    அதன்படி, வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. 

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிவிப்பில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஈரோடு கிழக்கு தொகுதியின் கீழ் சீயல்படும் பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதே சமயம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் பிற பகுதிகளில் பணிபுரியும் பட்சத்தில் அவர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

    ‘வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்…’ – வைரலாகும் விஜய் ஆண்டனியின் ட்விட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....