ஷாருக்கானின் ஜவான் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நடிகர் ஷாருக்கானின் பதான் படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகி பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. பதான் படத்திற்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள படம்தான், ஜவான்.
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் படத்திற்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜவான் படத்திலிருந்து வெளியிடப்பட்ட படத்தின் அறிமுக வீடியோவும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா போன்றோர் நடித்துள்ளனர். இப்படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருந்தன.
இந்நிலையில், நடிகர் விஜய் நடிக்க இருந்த கதாப்பாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் லியோ பட வேலைகளில் பிஸியாக உள்ளதால் இந்த முடிவு என கூறப்படுகிறது.
அதேநேரம், ஜவான் படத்தில் விஜய்யின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், அல்லு அர்ஜூன் வேறு ஒரு சிறப்பு கதாப்பாத்திரத்திற்காக அணுகப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதுவரையில், இத்தகவல்கள் குறித்த எந்தவித அறிவிப்பையும் ஜவான் குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்…’ – வைரலாகும் விஜய் ஆண்டனியின் ட்விட்!