Sunday, March 17, 2024
மேலும்
    Homeவானிலைவட தமிழகத்திற்கு நாளை பெரிய நாளாக இருக்கும்- தமிழ்நாடு வெதர்மேன்

    வட தமிழகத்திற்கு நாளை பெரிய நாளாக இருக்கும்- தமிழ்நாடு வெதர்மேன்

    மாண்டஸ் புயலால் வட தமிழகத்திற்கு நாளை பெரிய நாளாக இருக்கும் என வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் என்று சொல்லப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

    தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு 11.30 மணி அளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது.

    இதன்படி இன்று காலை நிலவரப்பபடி, காரைக்காலில் இருந்து 460 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சென்னையில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கே நிலை கொண்டிருந்தது.

    இந்நிலையில் மாண்டஸ் புயல் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளதாவது:

    வறண்ட காற்றும் காற்றின் வேகமும் மாண்டஸ் புயலின் தாக்கத்தை குறைகின்றன. மேலும் இந்த புயலின் மேக கூட்டங்கள் வடக்கில் அதிகமாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கில் இருந்து ஈரப்பதம் கிடைக்கிறது. 

    வட தமிழகத்திற்கு நாளை பெரிய நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகளை குறைத்து இயற்கை நமக்கு திட்டமிடப்பட்ட அனைத்தையும் அனுபவிப்போம். 

    இந்தப் புயல் அதிக மழைக்கான வாய்ப்பாக இருக்கலாம். மண்டு மண்டுவாகவே இருக்குமா அல்லது ஜண்டுவாக மாறுமா என பொருந்திருந்து பார்க்கலாம். 

    மழை மேகங்கள் ரேடாரில் பார்வைக்கு வந்தால் தான், மற்ற தகவல்கள் தெரியவரும். இன்னும் அது சற்று தொலைவில் தான் உள்ளது. 

    இன்று இரவு தான் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. நாளை ஒரு பெரிய நாளாக இருக்கும். புயல் கரையை கடக்கும் போது நல்ல மேகமூட்டம் இருக்கும். மேகங்களின் நடுப்பகுதி நம்மை கடந்து செல்லும் என்று நம்புகிறோம். கடலூருக்குக் கீழே புயல் கடக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரியில் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு! எதற்கு தெரியுமா? 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....