Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவியின் உடலில் பல இடங்களில் காயம்- முதல் கூராய்வில் தகவல்

    மாணவியின் உடலில் பல இடங்களில் காயம்- முதல் கூராய்வில் தகவல்

    கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடலை மறு கூராய்வுக்கு உள்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்த மாணவி ஶ்ரீமதி, கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.  

    இந்நிலையில், உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மாணவியின் மரணம் குறித்த உடற்கூராய்வு அறிக்கை ஜூலை 17 அன்று வெளிவந்தது. அந்த அறிக்கையில், மாணவி ஶ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் மற்றும் மாணவியின் உடைகளில் ரத்த கறைகள் இருந்தது தெரியவந்துள்ளது. 

    மேலும், மாணவி ஶ்ரீமதியின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த அதிர்ச்சியினாலும் மற்றும் இரத்தம் உறைந்ததாலும் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய தரவுகளுக்காக உடலின் பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாணவி ஶ்ரீமதியின் தந்தை மீண்டும் உடற்கூராய்வு செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு அவசர வழக்காக நேற்று (ஜூலை 19) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 

    மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

    மேலும், அவர் வெளியிட்ட உத்தரவில், மாணவியின் பெற்றோர் மீது இரக்கம் கொள்கிறேன். ஆனால் மற்றவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடாது. உடற்கூராய்வுக்குப் பின் மாணவியின் உடலை எதிர்ப்பின்றி பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், மாணவியின் பெற்றோர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

    அதோடு, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை 3 மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்ய வேண்டும். மறுகூராய்வு பரிசோதனையின் போது மாணவியின் தந்தை, தனது வழக்குரைஞர் கேசவனுடன் உடன் இருக்கவும் மறுகூராய்வு பரிசோதனையை முழுமையாக காணொளி பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

    இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் காவல்துறை வேலை முடிந்துவிட்டதாக நினைக்க வேண்டாம் என்றும் எதிர்காலத்தில் கல்வி நிலையங்களில் மரணங்கள் நிகழ்ந்தால் அதனை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். 

    கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபட்ட பலர் மீது வழக்குப்பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....