Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி வன்முறை: சர்ச்சையான தனியார் பள்ளியில் ஆய்வு

    கள்ளக்குறிச்சி வன்முறை: சர்ச்சையான தனியார் பள்ளியில் ஆய்வு

    கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி நேற்று (ஜூலை 18) ஆய்வு செய்தார். 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக, சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு அருகே நான்கு நாள்களாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த 17-ம் தேதி நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

    முன்னதாக, கடந்த 17-ம் தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுப்ட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டோர் தடுப்பை மீறி பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தனர். அந்நேரத்தில் இருந்து போராட்டம் வன்முறையாக மாறியாது.

    அப்போது, வன்முறையாளர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதில் காவல்துறையினர் பலர் காயம் அடைந்தனர். மேலும், அங்கிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்த வன்முறையாளர்கள் அங்கிருந்த கணினிகள், நாற்காலிகள், ஆவணங்களுக்கு தீ வைத்தனர். 

    இந்த வன்முறையில் காவல்துறையினர் பலருக்கு காயங்கள் ஏற்பட்டது.  இந்த நிலையில் காவல்துறை இது குறித்து வழக்குப்பதிவு செய்து, இந்த வன்முறையில்  ஈடுபட்டவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். 

    இந்நிலையில், மாணவி ஶ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக, மாணவி படித்து வந்த சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அதிகாரி சிவராமன், இன்னும் பிற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். 

    முன்னதாக,

    முன்னதாக, கடந்த 13-ம் தேதி உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இந்த உடற்கூராய்வு அறிக்கை கடந்த 17-ம் தேதி வெளிவந்தது. அந்த அறிக்கையில், மாணவி ஶ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் மற்றும் மாணவியின் உடைகளில் ரத்த கறைகள் இருந்தது தெரியவந்துள்ளது.

    மேலும், மாணவி ஶ்ரீமதியின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும் மற்றும் இரத்தம் உறைந்ததாலும் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய தரவுகளுக்காக உடலின் பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து, கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் தந்தை சென்னை உயர்தநீதிமன்றத்தில் உடல்மறுகூராய்வு செய்வதுக்கான அனுமதி கோரி தொடர்ந்த மனு கடந்த 18-ம் தேதி நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளதாவது:

    இந்த போராட்டத்துக்கு அனுமதி அளித்தது யார்? வன்முறையில் ஈடுபட்டது யார்? பள்ளி வன்முறையின் பின்னணி என்ன? வன்முறையை தூண்டிவிட்டது யார்? வன்முறை தொடர்பாக உளவுத்துறை எடுத்த நடவடிக்கை என்ன?  சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக்கொண்டால் நீதிமன்றம் எதற்கு? நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? என நீதிபதி சதீஷ்குமார் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

    பள்ளியில் நடந்த வன்முறை திடீர் கோபத்தில் உருவானது அல்ல. திட்டமிட்ட செயல். வன்முறையில் ஈடுபட்டோரை காணொளி காட்சி மூலம் அடையாளம் கண்டு டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டோரை தனிப்படை அமைத்து அடையாளம் காண வேண்டும். வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பை அவர்களிடம் இருந்தே வசூலிக்க வேண்டும்.

    மேலும், தனியார் பள்ளியில் டிராக்டரை கொண்டு பஸ்சை மோதிய சம்பவமே ஒட்டுமொத்த வன்முறைக்கும் காரணம். மாணவி இறுதிச்சடங்கு அமைதியாக நடக்க வேண்டும்.

    மேலும், மாணவியின் உடலை மறு கூராய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    மேற்கூறியவாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    இந்த உத்தரவுக்குப்பிறகு, மாணவி ஶ்ரீமதியின் தந்தை மாணவியின் உடலை மறுகூராய்வு செய்யவும், உடலை மறுகூராய்வு செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்று தந்தை ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.

    ஆனால், சென்னை உயர்நீதிமன்றம், தந்தையின் தரப்பில் மருத்துவரை அனுமதிக்க மறுத்துவிட்டது. எனவே, இந்த உத்தரவில் தங்களுக்கு நிறைவு இல்லை என்பதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தார். அதோடு, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

    அதன்பின்னர், மாணவி ஶ்ரீமதியின் உடலை மறுகூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு மாணவியின் தந்தை தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

    இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், உடற்கூராய்வின் போது மாணவி ஶ்ரீமதியின் பெற்றோர்கள் இல்லாவிட்டாலும் உடற்கூராய்வை மேற்கொள்ளும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மறுகூராய்வு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாணவியின் வீட்டில் நோட்டீஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....