Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை இன்று தாக்கல் :- நீதிபதி ஆறுமுகம் சாமி

    ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை இன்று தாக்கல் :- நீதிபதி ஆறுமுகம் சாமி

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் என மொத்தம் 159 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.

    இதுவரை 14 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட இந்த ஆணையத்தின் அறிக்கை தற்போது தயாராகி உள்ளதாகவும், இந்த அறிக்கை இன்று (ஆகஸ்ட் 23) தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, இந்த அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Also read : குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவதில் இனியும் தாமதம் கூடாது; அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....