Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஜெ வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை விற்கிறாரா தீபா ? பரபரப்பு ஆடியோ

    ஜெ வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை விற்கிறாரா தீபா ? பரபரப்பு ஆடியோ

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த வீட்டை விற்பனை செய்ய உள்ளதாக வெளியான தகவல் குறித்து ஜெ. தீபா ஜெயக்குமார் ஆடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். மேலும், வேதா இல்லத்துக்கு சசிகலா உள்பட யாரும் உரிமை கோர முடியாது என்றும் அந்த ஆடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தீபாவும், அவரது சகோதரர் தீபக்கும் விலை பேசி வருவதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல. இது எனது பாட்டியால் கட்டப்பட்டது. பிறகு அந்த வீட்டை, பாட்டி எங்கள் அத்தைக்கு கொடுத்தார்.

    நாங்கள் எங்களது சிறு வயதில் அந்த வீட்டில் வளர்ந்துள்ளோம். எனது அத்தையின் போயஸ் தோட்ட வீடு எங்களது பூர்வீக சொத்து. இதை நாங்களே பராமரித்துக் கொள்வோம். தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம். இது எங்களின் அமைதியை கெடுத்து, தேவையற்ற அழுத்தத்தை எங்களுக்கு கொடுக்கிறது” என்று ஜெ. தீபா ஜெயக்குமார் ஆடியோ ஒன்றை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    அதுமட்டுமின்றி மேலும் சசிகலா உள்ளிட்ட யாரும் என் அத்தை ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு உரிமை கோர முடியாது. எனக்கு என் அத்தை மட்டும் தான் முக்கியம். அவருடன் யார் இருந்தார்கள், வந்தார்கள், போனார்கள் என்பதெல்லாம் எனக்கு தேவையில்லை. எனது அத்தை பல பிரமிக்கத்தக்க பெரிய பொறுப்புகள் மற்றும் பதவிகளை வகித்தவர். அதனால், அவருக்கு உதவி செய்ய ஆலோசனை வழங்க, அவருடன் பயணம் செய்ய ஆயிரக்கணக்கானவர்கள் உடன் இருந்திருப்பார்கள். அதற்காக அவர்கள் எல்லோரும் போயஸ் கார்டனை உரிமை கோர முடியாது. குடும்ப உறுப்பினரும் ஆக முடியாது. எனது அத்தையுடன் பயணித்ததாகச் சொல்லும் சசிகலாவுக்கும் இது பொருந்தும் என்று அந்த ஆடியோ பதிவில் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....