Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராகுல் காந்தியின் டி-ஷர்ட் விலை இவ்வளவா? - வம்பிழுக்கும் பா.ஜ.க

    ராகுல் காந்தியின் டி-ஷர்ட் விலை இவ்வளவா? – வம்பிழுக்கும் பா.ஜ.க

    ‘பாரத் ஜோடா’ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, ரூபாய் 41 ஆயிரம் மதிப்புள்ள டி-ஷர்ட் அணிந்து இருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.

    இது தொடர்பாக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளது. முதல் புகைப்படத்தில் ராகுல் காந்தியின் புகைப்படமும் மற்றொரு புகைப்படத்தில் அவர் அணிந்திருந்தது போன்ற ஒரு டி-ஷர்ட் இன் விலையைக் குறிக்கும் படமும் இடம்பெற்றுள்ளது.

    அந்த புகைப்படத்தில் பர்பரி டி-ஷர்டின் விலை 41 ஆயிரத்து 257 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களோடு ‘பாரதம் பார்க்கட்டும்’ என்றக் குறிப்போடு பாஜக பதிவிட்டுள்ளது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி, ‘பிரதமர் மோடி 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோர்ட் அணிந்து இருந்ததாக விமர்சித்துள்ளது. மேலும், ‘பாரத் ஜோடா யாத்திரையில் திறளும் கூட்டத்தை பார்த்து பயந்துவிட்டீர்களா?

    பிரச்சனைகளை பற்றி பேசுங்கள், வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் குறித்து பேசுங்கள், ஆடைகள் குறித்து நாம் விவாதிக்க வேண்டும் என்றால், பிரதமர் மோடி 10 கோடி மதிப்புள்ள சூட் மற்றும் 1.5 லட்சம் மதிப்புள்ள கண்ணாடி அணிந்து இருந்தது பற்றியும் பேசப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....