Tuesday, May 7, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'இரவின் நிழல்' திரைப்படத்தின் நிஜமான வெளியீட்டுத் தேதி உங்களுக்காக இதோ!

    ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் நிஜமான வெளியீட்டுத் தேதி உங்களுக்காக இதோ!

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான பார்த்திபன் பல வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, பல படங்களில் நடித்தும் உள்ளார். இவர், தமிழ் சினிமாவை அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த வகையில் ஏற்கனவே ‘ஒத்த செருப்பு சைஸ் 7′ எனும் வித்தியாசமான திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து அகிரா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் ‘இரவின் நிழல்’ எனும் புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார், இயக்குநர் பார்த்திபன்.

    இரவின் நிழல் திரைப்படத்தில், பார்த்திபனுடன் இணைந்து முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் பணியாற்றியுள்ளார். இத்திரைப்படம் சிங்கிள் ஷாட் படமாக உருவாகி இருக்கிறது. அதாவது, ஒரே டேக்கில் ஒட்டுமொத்த படமும் நிறைவு பெற்று விடும். இந்திய சினிமா உலகில், ஒரு புத்தம் புதிய முயற்சியாக இந்தப் படத்தை பார்த்திபன் இயக்கியுள்ளார். பார்த்திபனின் இந்த புதிய முயற்சியை திரையில் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

    இரவின் நிழல் திரைப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் மற்றும் பிரிகடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில், இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 15 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, இன்று வெளியாகியுள்ளது.

    59 அரங்கங்களைக் கொண்ட மிகப் பிரம்மாண்டமான செட்டில், 300 நடிகர்கள் மற்றும் 150 தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட ஏராளமான ஆடை மற்றும் ஒப்பனை மாற்றங்களுடன் இந்தப்படம் தயாராகியுள்ளது. 50 ஆண்டுகள் பயணிக்கும் கதைக்களம் கொண்ட உலகின் முதல் ‘நான்-லீனியர் சிங்கிள் ஷாட்’ திரைப்படமாக ‘இரவின் நிழல்’ படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.

    இப்படம், சென்னையில் நடக்கும் கதை மற்றும் முறையற்ற உறவில் பிறக்கும் ஒரு குழந்தையின் வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு கால கட்டங்களை, முன்னும் பின்னுமாக ‘நான் – லீனியர்’ திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ளது. ‘இரவின் நிழல்’ படத்தின் திரைக்கதையை கடந்த 10 ஆண்டுகளாக எழுதி வந்திருக்கிறார் பார்த்திபன்.

    இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்திருப்பது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நிச்சயம் இப்படம் வெற்றி அடையும் என திரையுலகினர் கூறுகின்றனர்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு; 6 மாதத்தில் 7 விலங்குகள் உயிரிழந்த பரிதாபம்! .

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....