Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா1.8 கோடி சம்பள வாய்ப்பை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து பெற்ற இந்திய மாணவர்!

    1.8 கோடி சம்பள வாய்ப்பை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து பெற்ற இந்திய மாணவர்!

    கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் லண்டனில் உள்ள மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக்கில் ஆண்டுக்கு 1.8 கோடி ரூபாய்க்கான வேலை வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது கணினி அறிவியல் படித்துக் கொண்டிருக்கும் பிசாக் மொண்டால், வரும் செப்டம்பர் மாதம் லண்டனுக்கு பறக்க இருக்கிறார். 

    இந்த ஆண்டு ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் பெற்ற அதிகபட்ச சம்பளத்திற்கான வேலை வாய்ப்பு இதுதான். தனியார் பத்திரிகை ஒன்று தயாரித்த கணக்கின்படி, இந்தியாவிலிருந்து வெவ்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் ரூ. 1 கோடிக்கும் அதிகமான சம்பளத்திற்கான வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஃபேஸ்புக்கின் வேலை வாய்ப்பதைத் தொடர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவர் லின்க்கிடின் வலைத்தளத்திற்கு சென்ற அவருக்கு கூகுள் மற்றும் அமேசான் நிறுவங்களிருந்தும் பிசாக் மொண்டால் மாணவருக்கு வேலைப் வாய்ப்பு வந்துள்ளதாகவும் இந்த அற்புதமான வேலைவாய்ப்புக்கு நன்றியை கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். 

    மேலும் அவர், கடந்த பெருந்தொற்று காலத்தில் தனது படிப்பு சம்பந்தமான இன்டெர்ன்ஷிப்புகளை செய்ததகாவும் அதனால், பாடத்திட்ட ஆய்வுகளுக்கு வெளியே சென்று அறிவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். இவை தான் துணைக்கு நேர்காணல்களில் வெற்றிபெற உதவியதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பிசாக் மொண்டால், கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்களை விட ஃபேஸ்புக்கில் அதிக சம்பள பேக்கஜ் இருந்ததால் இதை தேர்வு செய்ததாகவும் கூறியுள்ளார். 

    கொரோன பெருந்தொற்றுக்கு பிறகு, இவ்வளவு பெரிய சர்வதேச அளவிலான சர்வதேச வேலை வாய்ப்புகளை பெறுவது இதுவே முதல் முறை என ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு அதிகாரி சமித்தா பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். 

    அங்கன்வாடி ஊழியரான மொண்டாலின் தாயார் இதுபற்றி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “அவர் சிறுவயதிலிருந்தே மிகச் சிறந்த மாணவன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது தாய், இது எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம் என்றும் அவர் பெரிய உயரங்களை எட்டுவதற்கு போராடினோம் என்றும், படிப்பில் அவர் தீவிரமாக இருப்பார் என்றும் தெரிவித்த மொண்டாலின் தாயார், உயர்நிலை தேர்வுகளிலும் நுழைவுத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களை பெற்ற பிறகு, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பை பெற்றார் என்றும் கூறியுள்ளார். 

    பொருளாதார வீழ்ச்சியால் தடுமாறும் இலங்கை; வீட்டிலிருந்தே பணி செய்ய ஊழியர்களுக்கு அறிவிப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....