Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் விளையாட உள்ள சி.எஸ்.கே - பிசிசிஐ தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

    3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் விளையாட உள்ள சி.எஸ்.கே – பிசிசிஐ தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

    ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்கள் சொந்த மண்ணிலும் இதர நகரங்களிலும் விளையாடும் முறை அடுத்த வருடம் முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

    சமீபத்தில் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தின்படி, கொரோனாவுக்கு முன்பு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது போல 2023-ல் ஐபிஎல் போட்டி பழைய நடைமுறையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

    ஐபிஎல் தொடரில் 10 அணிகளும் பாதி ஆட்டங்களை சொந்த மண்ணிலும் மீதி பாதி ஆட்டங்களை இதர நகரங்களிலும் விளையாடவுள்ளன. 2023-ல் தொடக்கத்தில் மகளிர் ஐபிஎல் தொடங்கப்படும்.மகளிர் யு-15 போட்டிகளை அறிமுகப்படுத்தவுள்ளது பிசிசிஐ. இந்தப் போட்டி டிசம்பர் 26 முதல் ஜனவரி 12 வரை பெங்களூர், ராஞ்சி, ராஜ்கோட், இந்தூர், ராய்பூர், புணே ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

    இவ்வாறு கங்குலி அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: 650 குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி ”கின்னஸ் சாதனை” படைத்த ஜான் சீனா !

    இக்கடிதத்தின் மூலம் 2023 ஐபிஎல் போட்டியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடவுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும், முன்னதாக, சென்னையில் கடைசியாக விளையாடி ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவேன் என தோனியும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....